இயேசு கிறிஸ்துவின் பூரண சுவிசேஷம்

• பிதா, இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியை விசுவாசிக்கின்றோம்.  ( 2 கொரிந்தியர் 13:14)

• நாம் எல்லோரும் பாவிகளாய் இருந்தோம். (ரோமர் 3:23)

• இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். (1 கொரிந்தியர் 15:3)

• இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மீது உள்ள விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப் பட்டிருக்கிறோம். (எபேசியர் 2:8,9)

• இயேசு கிறிஸ்துவின் இரத்த்தினாலும், பரிசுத்த ஆவியினாலும், நாம் கழுவப் பட்டிருக்கிறோம், பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம், நீதிமானாக்கப் பட்டிருக்கிறோம். (எபிரெயர் 10:10), (1 கொரிந்தியர் 6:11)

• இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுகிறோம். (அப்போஸ்தலர் 2:38)

• பரிசுத்த ஆவியை பெறுகிறோம். (யோவான் 3:5)

• இயேசு கிறிஸ்துவின் நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினால் சர்வாங்க சுகத்தை பெறுகிறோம். (அப்போஸ்தலர் 3:16)

• அடையாளங்களையும், அற்புதங்களையும் விசுவாசிக்றோம். (மாற்கு 16:16,17,18)

• ஆவிக்குரிய வரங்களையும், ஆவிக்குரிய கனிகளையும் நாடுகிறோம். (1 கொரிந்தியர் 12:1, கலாத்தியர் 5:22)

• இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தில் நாம் எ்லலோரும் பங்கு பெறுகிறோம். (1 கொரிந்தியர் 10:16 17)

• உயிர்த்தெழுதலின் நம்பிக்கை எங்களுக்கு உண்டு. (1 பேதுரு 1:4,5)

• இயேசு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறோம். (ரோமர் 15:20)

• கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு காத்திருக்றோம். (அப்போஸ்தலர் 1:11, யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 1:7, 22:12)